மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய பொறுப்புக்களை கையளித்தார் ஜனாதிபதி
13 Mar,2019
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, மேற்படி நியமனம் இன்று ஜனாதிபதியால் காலை 8.30 க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி 01. கிராம சக்தி, 02. சிறுநீரக நோய்த்தடுப்பு, 03.தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, 04. சிறுவர் பாதுகாப்பு, 05. தேசிய உணவு உற்பத்தி, 06.சுற்றாடல் பாதுகாப்பு, 07.நிலைபேறான அபிவிருத்தி, 08. ஸ்மார்ட் ஸ்ரீலங்கா போன்ற தேசிய திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு நிலையினை கருத்தில் கொண்டு மேற்படி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி செயற்றிட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியாக துரிதமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்த கருத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சதாசிவம் வியாழேந்திரனிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.