புலிகள் புதைத்த ஆயுதங்களை பாதாள குழுவினருக்கு விற்பனை செய்ய முயன்ற குழு சிக்கியது!
13 Mar,2019
தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில், வடக்கில் புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுக்களுக்கு விற்பனை செய்யும் சட்ட விரோத நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்ததாக கூறப்படும் 12 சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்ச் பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவர் உட்பட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டிருந்த 5 பேரும் தெற்கின் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உளவுத் துறையினர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொடுத்த உளவு அறிக்கையை மையப்படுத்தி, பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பிரகாம் குறித்த விசாரணைகளை சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது