இலங்கை மக்களை அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள் : மனித மாமிசத்திற்காக இரவு நேரத்தில் ஆரம்பித்த வேட்டை!(VIDEO)
11 Mar,2019
இலங்கை மக்களை அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள் : மனித மாமிசத்திற்காக இரவு நேரத்தில் ஆரம்பித்த வேட்டை!(VIDEO)
இலங்கையில் வாழ்ந்து வந்த, இன்னும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் மனித மாமிசம் உண்ணும் ‘நிட்டாவா’ எனப்படும் குள்ள மனிதர்கள் பற்றி அண்மைக்காலமாக அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.
வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, இவர்கள் இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின்னர் இவர்களின் இனம் பூமியில் இருந்து முற்றாக அழிந்து போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்களைத் தொடர்ந்து, இவர்களின் இனம் முற்றாக அழிந்துவிட்டதா அல்லது இவ்வினம் இன்னமும் இலங்கையில் வாழ்ந்து வருகிறதா என்பது பற்றி பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஆரம்ப காலங்களில், நிட்டாவா எனப்படும் இந்த குள்ள மனித இனத்தவர்கள் வேடுவர்களுடன் ஒன்று சேர்த்து வேடுவ இனத்தை ஒட்டியே வாழ்ந்துவந்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த குள்ள மனித இனத்தின் அழிவுக்கும் வேடுவர்களே முக்கிய காரணமாகவும் கருதப்படுகின்றனர்.
இக்குள்ள மனிதர்களின் மனித மாமிசம் உண்ணும் பழக்கமே இவ்வாறு வேடுவர்கள் இவர்களை முற்றாக அழித்தொழித்தற்கான பிரதான காரணமாகக் கருதப்படுகிறது. முன்பு குறிப்பிட்டது போல இக்குள்ள மனிதர்கள் தோற்றத்திலும், இயல்புகளிலும் மனிதர்களை ஒத்திருக்கவில்லை. மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான ஓர் அரை-மனித தன்மையே இவர்களிடம் காணப்பட்டது.
தோற்றத்தினை பொருத்தமட்டில், இவர்கள் மனித தோற்றத்தை விட குரங்குகளின் தோற்றத்தையே அதிகம் ஒத்திருந்தனர். அடர்ந்த உரோமங்கள் மற்றும் கூறிய நகங்களை கொண்டிருந்த இவர்கள் மனிதர்களைப் போல முதுகை நிமிர்த்தி நடமாடும் ஆற்றல் பெற்றிருந்தனர்.
அண்ணளவாக 3 அடி உயரத்தைக் இவர்கள் கொண்டிருந்தாலும் ஆண்களைவிட இவர்களின் பெண்கள் உயரம் குறைந்தவர்களாகவே காணப்பட்டனர். அதாவது பெண்கள் அண்ணளவாக 2 அடி உயரத்தினை மட்டுமே கொண்டிருந்தனர். அத்துடன் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஆடைகள் அணியாத நிர்வாண தோற்றத்திலேயே வாழ்த்து வந்திருந்தமையும் குறிப்பிடதக்கது.
இவர்களின் பிரதான உணவுகளாக உடும்பு, ஓணான், மான், மரை மற்றும் காட்டு எருமைகள் என்பன காணப்பட்டாலும், முன்பு கூறியது போல, இவர்கள் மனித மாமிசத்தை விரும்பி உண்ணும் பழக்கத்தினை கொண்டிருந்தனர். அதாவது, காட்டில் தனியாக உலாவித்திரியும் வேடுவர்கள் மற்றும் காட்டில் ஓடி விளையாடும் வேடுவர்களின் குழந்தைகளை கொன்று உண்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.பிற்காலத்தில், இக்குள்ள மனிதர்கள் தனியாக நடமாடும் வேடுவப் பெண்களை கடத்திச் சென்று அவர்களை கற்பழித்து, கொலைசெய்து அவர்களின் உடலை உணவாகக்கொள்ள ஆரம்பித்ததாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இருப்பினும், இற்றைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் வேடுவர்கள் இவர்கள் அனைவரையும் பிடித்து ஓர் குகையினுள் அடைத்து தொடர்ந்து மூன்று நாட்களாக தீ மூட்டிக் கொளுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இலங்கையில் அம்பாறை எனும் இடத்தில் சில விவசாயிகள் நிட்டாவா எனப்படும் இக்குள்ள மனிதர்களை ஒத்த தோற்றத்தையுடைய சில குள்ள மனிதர்களை நேரில் கண்டதாக தொரிவித்திருந்த போதிலும், இவர்களின் இனம் உயிருடன் இருப்பதற்கான எந்தவொரு உத்தியோகபூர்வ ஆதாரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.