வரலாற்றில் முதன்முறையாக ஸ்ரீலங்கன் விமான வேவையின் வித்தியாசமான விமானப்பயணம் முற்றிலும் பெண்கள்
08 Mar,2019
பெண்கள் மாத்திரம் கலந்துகொண்ட விமான சேவையொன்றை ஸ்ரீலங்கன் விமான சேவை இன்று மேற்கொண்டுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் விமான பணிக்குழாம் அடங்கிய ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குறித்த விமானப் பயணம் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் சென்ற விமானத்தில் விமானி, விமான உதவியாளர் மற்றும் பணிக் குழாமில் எட்டு பேர் அடங்கிய குழு ஒன்று இன்று காலை சிங்கப்பூரை நோக்கி பயணித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினம் உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்ற நிலையில், வெளிநாடுகளிலும் இவ்வாறு பெண்கள் அடங்கிய விமான சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.