இலங்கையில் அலுகோசு பதவிக்காக விண்ணப்பித்த அமெரிக்கர்
21 Feb,2019
சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜையொருவர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் குறித்த பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க பிரஜையொருவர் மின்னஞ்சல் ஊடாக அந்த பதவிக்காக விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் எவருக்கும் தன்னை தெரியாது என்பதனால் தான் அந்த பதவிக்கு தகுதியானவர் என கருதுவதாக அந்த நபர் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.