வன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம்
18 Feb,2019
இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்டு வந்த வவுனியா வளாகத்தை வன்னி பெருநிலப்பரப்பில் தனியான ஒரு பல்கலைக்கழகமாக மிக விரைவில் தரமுயர்த்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான தொழிநுட்ப பிரிவின் புதிய கட்டடத்தையும், அதனுடன் இணைந்த கணனி ஆய்வு கூடத்தையும் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் குணரத்ன, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசியர் இரத்தினம் விக்னேஸ்வரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் உட்பட பல்கலைக்கழக மாணவர்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்