ரணில் ஜனநாயகத்தின் பாதுகாவலன் அல்ல - ஜே.வி.பி.
08 Feb,2019
தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள முறையின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை காப்பவரல்ல என்பது தெளிவாகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகம், அரசியலமைப்பு நியாயங்கள் எவ்வாறானது எனின், அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தனக்கு அநீதி இழைக்கப்படுகின்றது எனின் அதனைப் பாதுகாப்பதற்கு முன்வருவார். மாறாக அரசியலமைப்பை மீறுவதால் தான் நன்மையடைய முடியும் எனின் எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க மாட்டார். இது ஜனநாயகம் அல்ல. அரசியலமைப்பை காக்கும் வகையிலான செயற்பாடு அல்ல.
ஆகையினால் தான் தேசிய அரசாங்க யோசனையை பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். அத்துடன் நிலையியற் கட்டளைகளை மீறியே அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கும் முயற்சித்தனர் எனவும் சுட்டிக்காட்டினார்.