விமானத்தினுள் உயிரிழந்த இலங்கை பிரஜை
05 Feb,2019
இன்று அதிகாலை குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
59 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவரே இவ்வாறு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குநிப்பிடத்தக்கது