இன்று இலங்கை தேசிய தினம் - 545 சிறை கைதிகள் விடுதலை
04 Feb,2019
பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் சிக்கியிருந்த இலங்கை கடந்த 4-2-1948 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து அரசியல் ரீதியான விடுதலை பெற்றது.
அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியை அந்நாட்டினர் இலங்கை தேசிய தினமாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், 71-வது தேசிய தினத்தை இலங்கை மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் கொழும்புவில் இன்று முப்படையினர் அணிவகுப்புடன் நடைபெற்ற கொண்டாட்டத்தை மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், தேசிய தினத்தையொட்டி சிறு வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, கொழும்பு, கண்டி, அனுராதாப்புரம் ஆகிய சிறைகளில் இருந்து 545 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை சிறைத்துறை ஆணையாளர் உப்புல்டேனியா தெரிவித்துள்ளார்.