கோட்டாவுக்கு எதிரான வழக்கில் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி
26 Jan,2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கில் மூன்று சாட்சியாளர்களுக்கு வௌிநாட்டுக்கு செல்ல கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது சாட்சியாளர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிக்ள விடுத்த கோரிக்கைக்கு அமைவாக டப்ளியூ.எம்.ஏ.எஸ் இத்தவெல மற்றும் ரொஹான் செனவிரத்ன ஆகிய இருவரும் பணி நிமித்தம் காரணமாக வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் சுரேன் பண்டார என்ற சாட்சியாளரை 15 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவுஸ்திரேலியா அனுமதித்துள்ள நீதிமன்றம் மீண்டும் அறிவிக்கப்பட்டால் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.