ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வருமானம் அதிகரிப்பு
25 Jan,2019
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போக்குவரத்து வருமானம் அதிகரித்துள்ளது.2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் , கடந்த வருடத்தின் கடைசி ஒன்பது மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அடைவுமட்டம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் பயணிகள் மற்றும் பண்டப்போக்குவரத்துவருமானமும் , சந்தை வருமானமும் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக அதன் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்தக்காலப்பகுதியில் விமானச்சேவை செயற்பாடுகள் மூலம் நிறுவனம் ஈட்டிய நிகர போக்குவரத்து வருமானம் 75 மில்லியன் டொலராகும். கடந்த ஆண்டுடன் இதனை ஒப்பிடுகையில் எட்டுசதவீத வளர்ச்சியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.