நகர் முழுவதும் சமமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்:சம்பிக்க ரணவக்க
14 Jan,2019
நகர் முழுவதும் சம அளவிலான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பொலநறுவை பிரதேசத்தில் பூர்த்தி செய்யப்பட்ட ஐந்து அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அதேபோன்று நகரை சுற்றியுள்ள பிரதேசங்களும் விருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயன்று வருவதாக தெரிவித்த அமைச்சர் நகரை அலங்கரிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பொழுது நகரின் மத்திய பகுதியை மட்டும் கவனத்தில் கொள்வது உகந்த விடயமல்ல
பொலன்னறுவை பிரதேசம் ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்படும் பிரதேசமாகும். திட்டமிடாத வகையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் இதற்கு மூல காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.