சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்வது அவசியம்”
14 Jan,2019
இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து இராணுவமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீள்பரிசீலனை செய்வது அவசியமாகும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் இலங்கை இராணுவப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளது.
பாரதூரமான யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து இராணுவமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீள்பரிசீலனை செய்வது அவசியமாகும்.
இலங்கை அரசாங்கமானது பொறுப்புக் கூறல் மற்றும் நீதிப்பொறிமுறையை உறுதிசெய்தல் தொடர்பில் இணைஅனுசரணை வழங்கி உடன்பட்டுள்ள நிலையில், தற்போது நடவடிக்கைகள் எவற்றையும் மேற்கொள்ளாமல் இருப்பதென்பது அரசியல் தலைவர்கள் தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு பின்னிற்பதையே எடுத்துக்காட்டுவதாக அமையும் .
இராணுவப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.