யுத்தம், மீண்டும் தலை தூக்கும் – கொடபொல அமர கீர்த்தி தேரர்
08 Jan,2019
புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் மூலம் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர். இவ்வாறு செயற்படும் பிரிவினைவாதிகளால் ஒரு போதும் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. மாறாக மீண்டும் யுத்தம்,கொலை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவையே தலை தூக்கும் என கொடபொல அமர கீர்த்தி தேரர் தெரிவித்தார்.
கொழும்பு (1) ஒன்றில் அமைந்துள்ள செமா கட்டடத்தில் மகா சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தேர்தலின் போது வாக்களித்த மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுமாரே கோரினார்கள். மாறாக இராணுவத்தினர் மீது விசாரணை நடத்துமாறு கோரவில்லை.
புதிய அரசியலமைப்பு மக்களுக்காக உருக்கப்படவில்லை. ஜெனிவாவிற்காகவும், சம்பந்தன் மற்றும் விக்னேஷ்வரனுக்காகவே உருவாக்கப்படவுள்ளது. எனவே மக்களும் இதற்கு எதிராக போராட வேண்டும். அதற்காக நாம் மக்களை வழிநடத்துவோம் என்றார்.