சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூருக்கு முதல் விமானம்!!
06 Jan,2019
கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்த சிங்கப்பூர் வர்த்தகர் குழுவினர், சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து முதற்தடவையாக சிங்கப்பூருக்குப் பயணித்துள்ளனர்.
குறித்த குழுவினர் இரு நாள்கள் பயணமாக கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தனர்.
சுற்றுலா , மீன்பிடி, வர்த்தக உடன்படிக்கைகள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் சிங்கப்பூர் நாட்டின் முதலீடுகளை கொள்ளும் நோக்குடன் குழுவினரின் பயணம் அமைந்தது.
இவர்கள் திருகோணமலையில் தங்கியிருந்து பல இடங்களுக்கு களப் பயணங்களிலும், சந்திப்புக்களிலும் ஈடுபட்டனர்.
இன்று சீன வர்த்தகர் ஒருவரின் சொந்த விமானத்தில் சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்டனர்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலான குழுவினர், முதலீட்டாளர்களை சீனக்குடா விமான நிலையத்தில் வைத்து வழி அனுப்பி வைத்தனர்.
சர்வதேச விமானம் ஒன்று இன்று சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து முதற் தடவையாக சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளது.