ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க
04 Jan,2019
ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொது மக்களின் எண்ணப்படி தெரிவு செய்யப்படுவார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
எதிர்வரும் 14 மாதங்களில் பொருளாதாரத்தை பலப்படுத்தி, நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.