மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு தலையுடன் தப்பிச் சென்ற கணவன்!
01 Jan,2019
நபர் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரின் தலையுடன் தப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரத்தினபுரியிலுள்ள பிரதேசமொன்றில் மனைவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரைக் கணவன் கொலை செய்துள்ளார்.
மோதல் நீண்ட தூரம் சென்றமையால் வாளால் மனைவியை வெட்டிக் கொலை செய்துள்ளார் கணவன்.
இந்தப் பயங்கர மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற 21 வயதான காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான கணவர் மனைவியின் கைகள் மற்றும் தலையை உடம்பில் இருந்து தனியாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் தலை மற்றும் கைகளுடன் மோட்டார் சைக்கிளில் கணவன் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சந்தேக நபரை பிடிப்பதற்காக பொலிஸார் மோப்ப நாய்களைப் பயன்படுத்தியபோது, குறித்த நாய்கள் இரத்தினபுரி சாவக்கலையை நோக்கிச் சென்றுள்ளன. எனினும், அங்கு எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.
சந்தேகநபர் அந்தப் பகுதிக்கு வந்து சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.