இலங்கையில் மீண்டும் பொலிஸ் கொலை!
27 Dec,2018
ஜா – எல, தெற்கு நிவந்தம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் பணியாற்றும் 49 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் கொலைச் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் ஜா – எலப் பொலிஸார் தெரிவித்தனர்.