மஹிந்த ராஜபக்ஷ ஜனவரி 2 ஆம் வாரத்தில் எதிர்க் கட்சிக் காரியாலயத்தில் பணி ஆரம்பம்
26 Dec,2018
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் கொழும்பு 7 இல் ஸ்ரீமத் மாகஸ் பிரணாந்து மாவத்தை இல 30 இல் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் காரியாலயத்தில் தமது கடமைகளைப் பொறுப் பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுவருடத்துக்கான பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வினையடுத்து எதிர்க் கட்சித் தலைமையகத்தின் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் எதிர்க் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இருப்பினும், தற்பொழுது எதிர்க் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தரித்து இருப்பதனால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைவருக்கான கடமைகளைக் கொண்டு நடாத்த முடியாதுள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.