மஹிந்தவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்த ரணில்!
22 Dec,2018
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. எனது பிரதமர் பதவியை எனது கட்சிக்குள் இருக்கும் எவரும் குழிதோண்டிப் பறிக்க முயலமாட்டார்கள். வீண்வதந்திகளைப் பரப்பி ஐ.தே.கவை உடைக்கலாம் எனக் கனவு காண வேண்டாம் என மஹிந்த அணியினரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.”
இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான சதிமுயற்சிகள் அக்கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கை செய்தியாளர் வினவியபோதே பிரதமர் ரணில் மேற்கண்டவாறு கூறினார்.