வடக்கு , கிழக்கை இணைக்க இடமளியோம் : ஜே.வி.பி
19 Dec,2018
வடக்கு , கிழக்கு இணைப்பிற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அந்தக் கட்சியின் பிரசார செயலாளரான விஜித ஹேரத் எம்.பியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்தில் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டது. ஆனால் அவை பலவந்தமாக இணைக்கப்பட்டதாக கூறி, உயர் நீதிமன்றத்தின் ஊடாக அதனை பிரித்தோம்.
இதனால் மீண்டும் வடக்கு – கிழக்கை இணைக்கும் செயற்பாட்டுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதுடன் நாட்டை பிளவுபடுத்தவும் அனுமதிக்கமாட்டோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். -(3)