ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கின்றார் ரணில்
14 Dec,2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதியபிரதமர் பதவிப்பிரமாணம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
எனினும் அமைச்சரவை நியமனம் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.