முஸ்லிம்களின் தாய்மொழியாக சிங்கள மொழி ; பேருவளை நகர சபையில் தீர்மானம்
06 Dec,2018
முஸ்லிம்களின் தாய்மொழியாக சிங்கள மொழியை ஏற்கவேண்டும் என பேருவளை நகர சபையில் தீர்மானம் நிறையேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பேருவளை நகர சபை தலைவர் மஸாஹிம் மொஹமட் அவர்களுக்கு தனது நன்றியை வெளியிட்டுள்ள வாசு
தற்போது நாட்டின் இறையாண்மைக்கு ஆப்பு வைக்க சில சக்திகள் செயற்பட்டு வரும் நிலையில் அரசியலமைப்பிற்கு மதிப்பு வழங்கும் இது போன்ற செயற்பாடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனவும் முஸ்லிம்கள் சிங்கள மொழியை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.