மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து பயணங்களும் இரத்து!
04 Dec,2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது கீழ் இயங்கிய அமைச்சரவை அமைச்சர்கள் மேற்கொள்ளவிருந்த அரச வெளிநாட்டு பயணங்கள் மற்றும் சந்திப்புக்கள் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலான அனைத்து செயற்பாடுகளும் நேற்று (திங்கட்கிழமை) மாலையுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், தங்களின் பதவி நிலைகளில் தொடர்ந்து இருப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்ததை தொடர்ந்தே இப்பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மஹிந்த உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் குறித்த நீதிமன்ற தீர்ப்பினால் எவ்வித அதிகாரமற்றவர்களாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளும் இரத்து செய்யப்பட்டதாகவுமே கணக்கிடப்படுமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.