வடக்கு கிழக்கு மக்கள் நாடு பிளவு படுவதா அவசியம்
02 Dec,2018
தமது ஆட்சியை பலமாக அமைத்தவுடன் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்வதே முதல் நடவடிக்கை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெற்ற மிக பெரிய ஊழலான மத்திய வங்கி ஊழல் குற்றத்தில் முதல் குற்றவாளி ரணில் விக்கிரமசிங்கவே எனவும் அவரை கைவிலங்கு போட்டு சிறையில் அடைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் நிலையான அரசாங்கத்தை அமைப்பது குறித்து கருத்தினை வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீதிமன்றின் தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளதாகவும் தீர்ப்பு தமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும் எனத் தெரிவித்த வாசுதேவா பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறென தீர்ப்பு வந்தால் அப்போதில் இருந்து ஆட்சியை கையில் எடுத்துக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் நாட்டினை பிளவுபடுத்தும் கொள்கைக்கு ஆதரவு வழங்காது என்பது தமக்கும் தெரியும் எனவும் வடக்கு கிழக்கு மக்கள் அபிவிருத்தி அவசியமா அல்லது நாடு பிளவு பட வேண்டுமா என்பதை வடக்கு கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.