பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் : விமல் பரபரப்புத் தகவல்
02 Dec,2018
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான கள்ளத்தொடர்பு அம்பலமாகியுள்ளதாக மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் விமல்வீரவன்ஸ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
” பிரதான எதிர்க்கட்சிப் பதவியை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலங்களில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிபோலவே செயற்பட்டது. ஆனால், அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை.
எனினும் தற்போது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதன்மூலம் ஐ.தே.கவுக்கும், கூட்டமைப்புக்குமிடையிலான கள்ளஉறவு அம்பலமாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே சமஷ்டி தீர்வை பெறமுடியும். பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் அதை வழங்கவேண்டும் என கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
கூட்டமைப்பின் அனுமதியின்றி வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்ககூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிஈழத்தை அடைவதற்கான வழிமுறையே இது. எனவே, மக்கள் சிந்திக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.