மஹிந்தவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய முக்கிய பிரேரணை!
29 Nov,2018
சிறிலங்காவின் பிரதமர் அலுவலகத்துக்கு நிதி ஒதுக்கீட்டைத் தடுக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு வெற்றிகரமாக சபையில் நிறைவேறியுள்ளதாக செய்தியாளர் கூறுகின்றார்.
இதன்படி குறித்த பிரேரணை மீதான குரல் வாக்கெடுப்பும் இலத்திரனியல் வாக்கெடுப்பும் சபையில் நடந்ததுள்ளதுடன் குறித்த இரண்டு வாக்கெடுப்பின்போதும் 123 வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் குறித்த பிரேரணை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நாளை காலை 10.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை பிரதமர் அலுவலகத்துக்கு நிதி ஒதுக்கீட்டைத் தடுப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.