பாதுகாப்பு படைகளின் பிராதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன, கைது
28 Nov,2018
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலையானன நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக முன்னதாகவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்தார், அவர் தப்பிச் செல்ல உதவினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று அழைப்பு விடுத்திருந்தனர்.
எனினும் அவர் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.இந்த நிலையில், அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று காலை முன்னிலையானார்.
காலை 9 மணியளவில் ஆரம்பமான விசாரணை மீண்டும் 2.15 வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.