எனது கட்சிக்கும் இடம் வேண்டும் – டக்ளஸ்
23 Nov,2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் தெரிவுக் குழுவில் இடம் வேண்டுமென மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றம் கூடியபோது நிலையியற்குழு அமைப்பது தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு வலியுறுத்தினார்.
மேலும் நான் ஆளும் கட்சியில் இருக்கின்றேனோ அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனோ என்பது எமது தனிப்பட்ட தீர்மானமாகும். அந்தவகையில் அமைக்கப்படவுள்ள நிலையியற் குழுவில் எமது கட்சிக்கும் இடம் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.