வழக்கு தாக்கல் செய்யப்படாது, தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவர்ஸ
22 Nov,2018
வழக்கு தாக்கல் செய்யப்படாது சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதத்தில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பிலும் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.