சஜித்துக்கு ஆப்பு! பிரதமர் வேட்பாளராக ரணிலின் மனைவி?
12 Nov,2018
பிரதமர் வேட்பாளராக சஜித் போட்டியிட வாய்ப்புகள் உண்டு என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பிரதமர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்கிரமசிங்க களமிறக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறாவது எதிர்வரும் தேர்தலின்மூலம் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற கடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.
இதுவரை காலமும் அரசியலில் வெளிப்படையாக களமிறங்காத ஒரு நபராக இருந்துவரும் மைத்திரி விக்கிரமசிங்க இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டால் கணிசமானளவு மக்கள் ஆணையினைப் பெறமுடியும் என கருதுகின்றனர்.
அத்துடன் களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைப் பேராசிரியராக மைத்திரி விக்கிரமசிங்க விளங்குவதால் கல்விப்புலம் சார்ந்த ஆதரவும் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.