என்னை சிறையிட 3000 மில்லியன் பேரம்-பொன்சேகா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
08 Nov,2018
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மூன்றரை வருடங்களாக வண்ணாத்துப்பூச்சிகளுடன் அரசாங்கத்தை முன்னெடுத்த ஜனாதிபதி, அரசாங்கத்தில் இருந்தவர்களை வண்ணத்துப்பூச்சிகள் என மேடையில் பேசியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகந்துறையில் மதுஷ்க என்ற ஒருவர் இருந்தார். இன்று பிரபல தலைவர் ஒருவர் அவர்களுடன் கதைத்து சிறிசேனவின் தரப்பினர் 3000 மில்லியனை கொடுப்பதாகவும், முதலில் 1500 மில்லியனையும், வேலையை முடித்த பின்னர் எஞ்சிய 1500 மில்லியனையும் கொடுப்பதாகப் பேரம் பேசப்பட்டுள்ளது.
“மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு திட்டமிடுவதற்காக உதவுமாறு” சரத் பொன்சேக்கா பாதாள கோஷ்டியின் தலைவருடன் பேசியதாக குரல் பதிவொன்றை வழங்குமாறு பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
அவ்வாறான விடயமொன்றை உருவாக்கி பாதாள உலகத் தலைவர்களுக்கு 3000 மில்லியனை வழங்கி, எம்மை சிறையில் அடைக்க முயல்கின்றனர் எனத் தெரிவித்தார்.