இலங்கை நாடாளுமன்றம் இன்றிரவு கலைப்பு ?
07 Nov,2018
இலங்கையில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்க திட்டமிட்டு உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் எம்பி அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் எம்பி அஜித் பீ பெரேரா இந்த தகவலை வெளியிட்டார். நாடாளுமன்றம் சென்றபோது, இந்த தகவல் தமக்கு கிடைத்தாக அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் அஜீத் பீ பெரேரா வெளியிட்ட இந்த தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.