அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அலரிமளிகையை சென்றடைந்தது! (3ஆம் இணைப்பு)video
30 Oct,2018
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி நியமித்ததை கண்டித்து பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்சமயம் அலரிமளிகைக்கு முன்பாக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் (2ஆம் இணைப்பு)
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததை கண்டித்து பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது.
குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தின் போக்குவரத்து பாதைகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் போராட்டத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதனை தடுப்பதற்கு 2ஆயிரம் பொலிஸார், 600 போக்குவரத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றினை ஐக்கிய தேசிய கட்சி நடத்தவுள்ளது.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இப்போராட்டம் முன்னாள் பிரதமர் ரணிலையோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கோ மேற்கொள்ளப்படும் போராட்டமல்ல. இருதரப்பு முரண்பாடுகளுக்காக மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்யும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துவதற்கே இப்போராட்டதை நடத்தவுள்ளதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளளது.
மேலும் ஜனாதிபதிபதியின் தனிப்பட்ட தீர்மானம் நாட்டின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் சீர்குழைத்துவிட்டதாகவும் ஐ.தே.க கவலை தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றைய மக்கள் போராட்டம் ஊழலுக்காக அல்லாமல் மனிதாபிமானத்துக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் சர்வாதிகாரிகளுக்கு எதிரானதுமாக அமையுமென முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.