இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை
27 Oct,2018
நாட்டின் தென்கிழக்கு திசையின் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 24 மணத்தியாலங்களுள் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 முதல் 150 மில்லி மீட்டர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதனுடன் அம்பாந்தோட்டையில் இருந்து மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.