இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்- முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்பு
26 Oct,2018
இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு இலங்கை விடுதலை கட்சி (SLFP), ஒருங்கிணைந்த தேசிய கட்சி (UNP) இணைந்து ஆட்சி அமைத்தது. சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அதிகமான இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறிசேனா கட்சி அரசில் இருந்து இன்று திடீரென விலகியது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா.
உடனடியாக அதிபர் சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட ராஜபக்சேவிற்கு சுப்ரமணிய சாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.