யாழ்ப்பாணத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ள மனித எச்சங்கள்
12 Oct,2018
யாழ்ப்பாணம் – அச்சுவேலி – சூசையப்பர் வீதியின் ஓரத்தில் குழி ஒன்றில் இருந்து மனித எச்சம் என்று சந்தேகிக்கப்படும் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார கம்பம் நாட்டுவதற்காக குழி ஒன்றை தோண்டிய போது இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் அச்சுவேலி காவற்துறையினரை தொடர்பு கொண்டு வினவிய போது, மண்டை ஓடும் எலும்புத் துண்டுகளும் கிடைக்கப்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தினர்.
எனினும் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னரே மேலதிக விபரங்களை வழங்க முடியும் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.