நாளைய தினம் மஹிந்த தலைமையில் முக்கிய சந்திப்பு
10 Oct,2018
அரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் நாளை ஒன்றுக் கூடவுள்ளனர்.
இந்த ஒன்றுக்கூடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஜேராமையில் இடம்பெறவுள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழு நேற்றைய தினம் கூடி கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் நாளை விரிவாக ஆராயப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 15 பேர் கொண்ட குழு பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.