தமிழர் பகுதியில் ஒரேநாளில் 13 பேர் கைது..
23 Sep,2018
திருகோணமலை மாவட்டத்தில் 5 பொலிஸ் நிலையங்களில் பிடிவிராந்து பிடிக்கப்பட்டுள் 13 சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச்செயல்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று இருக்கின்ற நிலையில் நீதிமன்ற வழக்குகளுக்கு சமூகம் அளிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில் இச் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் 6 சந்தேகநபர்களையும், மொரவெவ பொலிஸ் நிலையத்தில் ஒரு சந்தேக நபரையும், உப்புவெளி மற்றும் சீனக்குடா பொலிஸ் நிலையங்களில் நான்கு சந்தேக நபர்களையும் இன்றைய தினம் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இத்துடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சந்தேக நபர்களின் குற்றச் செயல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்