மாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – இராணுவ சிப்பாய்கள் கைதுஸ
19 Sep,2018
பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இரண்டு இராணுவ சிப்பாய்களை முல்லைத்தீவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுக்கு , அப்பகுதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு இராணுவ சிப்பாய்க்களும் தமது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளனர்.
அதனை அப்பகுதியில் நின்றவர்கள் அவதானித்து குறித்த இரு சிப்பாயக்களையும் மடக்கி பிடித்து காவற்துறையினருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் இருவரையும் கைது செய்து காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட இரு சிப்பாய்க்களும் 59ஆவது படைப்பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களிடம் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.