நல்லவேட்பாளர் கிடைக்காவிட்டால் நான் போட்டியிடுவேன்- மகிந்த
13 Sep,2018
நாட்டை பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிராந்திய அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அவற்றை வழங்கவேண்டும் எனினும் இலங்கை சிறிய நாடு நாங்கள் நாட்டை பிரித்து சமஸ்டியை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான சாத்தியம் முற்றாகயில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்னிடம் வந்து இது குறித்து பேச தயாராகயில்லை ரணில் அவர்களிற்கு சிறந்த தீர்வை வழங்குவார் என அவர்;கள் கருதினர் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நான் இன்னமும் இது குறித்து தீர்மானிக்கவில்லை நாங்கள் சிறந்த வேட்பாளர் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் அவ்வாறான சிறந்த வேட்பாளர் கிடைக்காவிட்டால் நானே போட்டியிடவேண்டியிருக்கும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.