.நாவில் சிறிலங்கா இராணுவத்தைக் காப்பாற்றும் திட்டத்தில் மைத்திரி
08 Sep,2018
சிறிலங்கா .இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கும் திட்டம் ஒன்றை தாம் எதிர்வரும் 24ஆம் நாள், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
நிவித்திகலவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
”இந்த திட்டம் குறித்து சிலர் விமர்சனம் செய்வார்கள். ஆனால், இது ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படுவது முக்கியம் என்று உணர்கிறேன்.
எதிர்வரும் 24ஆம் நாள் ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தவுள்ள உரையின் போது, சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இல்லாமல் செய்யும் தேவை உள்ளது.
விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா கூட்டத்தில் விபரித்துக் கூறப்படும்.
ஐ.நாவுடனான கலந்துரையாடல்கள் மட்டுமே, சிறிலங்கா குறித்த மனித உரிமைகள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உள்ள ஒரே வழியாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.