ஹம்பன்தொட்டா துறைமுகத்தை ராணுவத்துக்காக பயன்படுத்த சீனாவுக்கு இலங்கை எதிர்ப்பு
22 Aug,2018
இலங்கையின் தென்பகுதியில் ஹம்பன்தொட்டா துறைமுகம் உள்ளது. அதை 99 ஆண்டுகள் குத்தகைக்கு இயக்க ஒரு சீன நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு இலங்கை அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அந்த துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு வந்த ஜப்பான் ராணுவ மந்திரி இட்சுனோரி ஒனோடரா, இலங்கை ராணுவ மந்திரி ருவன் விஜேவர்தனேவை சந்தித்து, இதுபற்றிய தனது கவலையை தெரிவித்தார்.
அப்போது, ஹன்பன்தொட்டா துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று ருவன் விஜேவர்தனே தெரிவித்தார்