50 இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானம்
12 Aug,2018
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு முகம்கொடுப்பதற்கு 50 இராணுவத்தினரை இந்தியாவுக்கு அனுப்பி ரயில் ஓட்டுவதற்காக பயிற்றுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் டில்லி நகரில் அமைந்துள்ள ரயில் சாரதிகள் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பி இந்த பயிற்சியை இராணுவத்துக்கு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்காக, இராணுவ யுத்த வாகனம் செலுத்தும் சாரதிகளை தெரிவு செய்வதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்தியாவிலுள்ள இந் நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சி பெற்றதன் பின்னர், அவர்களை நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது பயன்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.