யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி! ஹபரணையில் சம்பவம்
09 Aug,2018
கொழும்பிலிருந்து கிண்ணியாவின் மூதூர் நோக்கி பயணித்த வேன் ஒன்று ஹபரணை காட்டுப் பகுதியில் வைத்து யானை ஒன்றுடன் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்றிரவு (08) இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட நால்வருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் கிண்ணியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் நவீத், எனும் 27 வயது நபர் ஸ்தலத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி-Habaran Accident 1 Dead-Child and 4 Other Injured
யாருமில்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதால் குறித்த நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.