ஏழுமலையானை தரிசித்த பிரதமர் ரணில்- வீடியோ
04 Aug,2018
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, பிரதமர் ரனில் விக்ரமசிங்க மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து, இந்திய விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
அங்கு, பிரதமர் ரணில் விகரமசிங்கவை ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் சுஜயா கிருஷ்ணரங்காராவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் திருப்பதிக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார். இரவு கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க மனைவியுடன் தங்கினார்.
இதைதொடர்ந்து இன்று காலை 8.45 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை, பிரதமர் அவருடைய மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
கோவில் கொடி மரத்தை தொட்டு வணங்கி தரிசனம் செய்தனர். பிறகு, ரங்கநாயகர் மண்டபத்தில் பிரதமர் ரணனில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவியை அமர வைத்து லட்டு பிரசாதம், தீர்த்தம் மற்றும் ஏழுமலையானின் படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலை பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.