துரத்தி துரத்தி அடித்து கொலை செய்த யானை! (மட்டக்களப்பு நெல்லிக்காடு)
03 Aug,2018
நேற்று காலை தமது குடும்பத்தை காப்பாற்ற மீன்பிடிக்க சென்ற வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆயித்தியமலை நெல்லிக்காடு கிராமத்தில் புகுந்த மூன்று யானைகள் அக்கிராமத்தில் உள்ள ஏழைகளின் வீடு,தோட்டம் எல்லாவற்றையும் அழித்த பசி தீராம மாமங்கம் சண்முகநாதன் (55வயது) எட்டுப்பிள்ளைகளின் தந்தையை ஏறிமிதித்து உடலை சிதைத்து கோரமாக கொலை செய்துள்ளது.
அதே நேரம் இன்று காலை இன்னும் மொரு ஏழை#யானை_தாக்குதலில் பலியாகியுள்ளார்
35 ம் கொளனி கண்ணகி புலத்தைச்சேர்ந்து தங்க ராசா மகேஸ்வரன். என்ற முப்பது வயதுடைய நபரே யானைதாக்குதலில் உயிரிழந்தவர்
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய் ஏற்கனவே யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இப்பொழுதான் கொஞ்சம் கொஞ்சமாக தம்மை திடப்படுத்தி வாழ்க்கையை கொண்டு போகும் போது அதை கூட பொறுக்க முடியாத அளவு கொடூரயானை அப்பாவி ஏழைகளின் உயிரும் உடமைகளும் அழித்து விவசாயம் இழந்து ஒவ்வொரு குடும்பமும் நடுத்தெருவில் நிற்கும் துன்பமான சூழலை எதிர் கொள்ள வைக்கின்றது.