கோட்டாபயவுக்கு 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு
03 Aug,2018
தங்கல்லை வீரக்கெட்டிய மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை என்பவற்றை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை பற்றிய நீதிமன்ற அறிவிப்பு கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.
இவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா இந்த அறிவிப்பை பிறப்பித்துள்ளார்.