மஹிந்த ராஜபக்சவிடம் பேசியது என்ன? உண்மையை வெளியிட்ட சம்பந்தன்!
27 Jul,2018
அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடிமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று கருத்துத் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விளக்கமளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் ஆகியோருடன் நான் நீண்ட நேரம் கலந்துரையாடினேன் பல விடயங்கள் குறித்து உரையாடினோம். அவர் தனது காலத்தில் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கான விரும்பியதாகவும் அதற்கு அந்த நேரத்தில் பல தடைகள் ஏற்பட்டதாகவும் சொன்னார்.
பழையதை மறந்து விட்டு தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் யாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் கூறினேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டு அதனை பரிசீலிப்பதாக சொன்னார் எனத் தெரிவித்தார்.
வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் எழுதிய “யார் இந்த இராவணன்” நூல் வெளியீட்டு விழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் திருகோணமலையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.