நல்லிணக்கத்தின் அடையாளமாக வடக்கு மாற்றியமைக்கப்படவேண்டும்-ஐ.நா அதிகாரி தெரிவிப்பு
26 Jul,2018
நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான அடையாளமாக வட மாகாணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10 முதல் 14ஆம் திகதிவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி லேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு பொறுப்புகூறாமை, பாதுகாப்பு துறைக்குள் நிலவும் தண்டனைகள், பொதுமக்களின் செயற்பாட்டில் இராணுவத்தின் தலையீடு மற்றும் இராணுவத்திலுள்ள பெரும்பான்மை சிங்கள தேசியவாதிகளின் செயற்பாடுகள் என்பன தமிழ் சமூகத்தின் மத்தியில் பகைமையை நிலைநாட்டுவதற்கே வழிவகுப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பு ஊழியர்களும், பொது அதிகாரிகளும் சேவையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான செயல்முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. அதிகாரி தெரிவித்துள்ளார்.